01). எண் முறைமை என்றால் என்ன?
  • கணினித் தரவுகளை நாம் சமர்ப்பிப்பதற்கான அல்லது எடுத்துக்காட்டுவதற்கான முறைகள்.
02). கணினி எண் முறைமைகளின் வகைகள்:
  1. இரும(துவித) எண் முறைமை
  2. எண்ம எண் முறைமை
  3. பதின்ம எண்முறைமை
  4. பதினறும் எண்முறைமை
  • ஏதேனும் எண்ணொன்று எந்த எண் முறைமையைச் சார்ந்தது எனக் குறிப்பிடுவதற்கு அதற்கான அடி (Base) பயன்படுத்தப்படும். 
  • எண் முறைமையிலுள்ள ஒன்றுக்கொன்று வேறுபட்ட குறியீடுகளின் (Symbols) எண்ணிக்கை அந்த எண்ணின் அடிக்குச் சமமாகக் காணப்படும்.


குறிப்பு

தரம் 8 இல் இரும எண்கள், பதின்ம எண்கள் ஆகியன மட்டுமே ஆராயப்படும்.

03). எண் முறைமையை வகைகுறித்தல்:

  • எண்ணொன்றின் எண் முறைமையைக் காட்டுவதற்கு அதன் பயன்படுத்தப்படும். எண்ணின் வலதுபக்க கீழ் மூலையில் அடி குறிக்கப்படும்.
உதாரணம் - 

04). பதின்ம எண் முறைமை
  • பொதுவாக அனைத்து எண்கணித நடவடிக்கைகளுக்கும் பதின்ம எண்களைப் பயன்படுத்துகிறோம்.
  • பதின்ம எண் முறைமையிலுள்ள இலக்கங்கள் - 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 வரை ஆகும்.
  • இம் முறைமையில் அடிப் பெறுமானம் குறித்துக்காட்டப்படுவதில்லை

05). இரும எண் முறைமை
  • 0, 1 ஆகிய இரண்டு குறியீடுகள் மட்டும் பயன்படுத்தப்படும் எண் முறையை இரும எண் முறைமை எனப்படும்.
  • இரும எண்ணின் ஒரு இலக்கம் பிற்று (Bit) எனப்படும்.
  • கணினியில் தரவுகள் இவ் எண் முறைமையிலேயே சேமிக்கப்படுகின்றன.