Ad Code

கணினியின் பாதுகாப்பிற்குக் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவோம் Notes and Online Exam

பரீட்சையை செய்வதற்கு முன் இந்த குறிப்பை கொப்பியில் எழுதி படிக்கவும். பின்னர் பரீட்சையை செய்யவும்

  • இரகசியச்சொல் /கடவுச்சொல் (Password):
    • கணினியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள விடயங்களை அனுமதியற்றோர் அணுகாதவாறு பாதுகாத்து வைப்பதற்குக் கணினிக்கு ஓர் இரகசியச்சொல்லை வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும். இரகசியச்சொல் /கடவுச்சொல் (Password) எனப்படும்.

  • கணினிக்குக் கடவுச்சொல்லை வழங்கும்போது பின்வருவனவற்றையும் கருத்திற் கொள்வோம்
    • கடவுச்சொல் எழுத்துகள் (A - Z, a - z), எண்கள் (0 - 9),[குறியீடுகள் (@, #,S) போன்றவற்றின் சேர்மானமாக இருத்தல் வேண்டும். அது குறைந்தபட்சம் எட்டு வரியுருக்களைக் (Characters) கொண்டிருக்கும் அதேவேளை மேற்குறித்த வரியுரு வகைகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒன்றேனும் இடம்பெற வேண்டும்.
    • கடவுச்சொல் உங்களுடைய பெயர், பிறந்த திகதி போன்ற ஊகிக்கத் தக்க ஒரு  சொல்லாக இருத்தலாகாது.
    • கடவுச்சொற் சாடையை (Password hint) வழங்கலாம். அச்சாடை கடவுச்சொல் மறக்கப்படும்போது நினைவுகூரப்படுவதற்கு உதவும் ஒரு சொல்லாக அல்லது கோவையாக அமையலாம்.
    • மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம் கடவுச்சொல்லை நினைவுகூரலாம்.

    Post a Comment

    0 Comments